அசிங்கப் படுத்தும் பேன் தொல்லைக்கு 1மணி நேரத்தில் தீர்வு..! இது அனுபவ உண்மை …அதிகம் பகிருங்கள்..!!

பேன்… மனிதர்கள் மூலம் பரவும் ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி. பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல்கள் மூலமாகவும், அவர் பக்கத்தில் தூங்குவதாலும் எளிதில் பரவக் கூடியது. இது இரத்ததை உறிஞ்சுவது மட்டுமன்றி அரிப்பால் தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடையச் செய்யும்.

வேர்களின் பாதிப்பால் தலை முடி உதிரலாம். இதனால் அதிகமாக பாதிக்கப்படுவது பள்ளிக்குச் செல்லும் இளம்பெண்களே. பள்ளியில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவது தொந்தரவாக இருக்கும். பேன்கள் அதிக அளவில் உற்பத்தியாகும் தன்மைக் கொண்டதால் உடனே அகற்றுவதுதான் சிறந்தது. வீட்டுக் குறிப்புகளைப் பயன்படுத்தி எவ்வாறு அகற்றுவது என்று பார்க்கலாம்.

வேப்பிலை மற்றும் துளசி: வேப்பிலை பாக்டீரியாக்களை ஒழிக்கும் வல்லமை கொண்டது. துளசி குளுமைத் தன்மை அளித்து இரத்த ஓட்டத்தை சீராக்கும். துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதை வேர்களில் படும்படி தேய்த்து, காய்ந்ததும் தலைக்குக் குளித்துவிடுங்கள். இப்படி வாரம் இரண்டு முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.

தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் : கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும். கற்பூரத்தில் இருக்கும் ஆண்டி – பாராசிடிக் என்ற வேதிப்பொருள் பேன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது. தேங்காய் எண்ணெய் மற்றும் கற்பூரம் : கற்பூரத்தை தூளாக்கி தேங்காய்

எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலுமாக ஒழிந்துவிடும். கற்பூரத்தில் இருக்கும் ஆண்டி – பாராசிடிக் என்ற வேதிப்பொருள் பேன்களை அழிக்கும் ஆற்றல் கொண்டது.

உப்பு மற்றும் வினிகர் : உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை ஸ்பிரே பாட்டிலில் நிரப்பி வேர்களில் படும்படி ஸ்பிரே செய்யுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து தலைக்குக் குளித்தால் பேன் தொல்லை இருக்காது.

பூண்டு : பூண்டின் வாசனை மிகவும் உறுதியானது. இந்த வாசனை பேன்களுக்கு அசௌகரியமாக இருக்கும். பூண்டை நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலையில் சீராக அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளித்தால் பேன்கள் அகலும். வாரம் ஒரு முறை செய்யலாம்.

வாஸ்லின் : பெட்ரோலியம் ஜெல்லி எனப்படும் வாஸ்லினை வேர்களில் தேய்த்து இரவு தூங்கிவிடுங்கள். மறுநாள் காலை தேங்காய் எண்ணெய் தடவி பேன் சீப் கொண்டு வாரினால் அனைத்து பேன்களும் வந்துவிடும். பின் தலைக்குக் குளித்துவிடுங்கள்.