உடல் முழுவதும் வெள்ளையாக தோல் சுருக்கம் நீங்க குளியல் பொடி

இளம் வயதினர் வயதை விட உருவம் கொண்டே மதிப்பிடுகின்றனர். ஆனால், வயது இருப்பதாகினும், முதுமையானவரை போன்ற தோற்றம் கொண்டவராக விளங்கினால், அவர்களை குறித்து முதுமையானவர் என்ற எண்ணமே ஏற்படும்.

இது இந்த தலைமுறையில், ஆண் மற்றும் பெண் என இரு பாலினரிடத்திலும், தோல் சுருக்கம் இளமையிலேயே காணப்படுகிறது; இதனால், இளமையாய் இருந்தும் முதியவராய் காட்சியளிக்கின்றனர்.

தோலின் நெகிழ்வுத் தன்மையாலும், தோல் உலர்ந்து போவதாலும் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. வயதானவர்கள், வெயிலில் அலைபவர்கள், புகை பிடிப்பவர்கள் மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்கள் போன்றோருக்கு தோலில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

இளம் பருவத்தில், முதியவர் போன்று காட்சியளிப்பதை யார் தான் விரும்புவர்? இளமையிலேயே தோன்றும் தோல் சுருக்கத்தை போக்குவதற்கு உதவும் சில வழிகளை பற்றி இந்த பதிப்பில் படித்தறியுங்கள், தோழியரே!