அனகோண்டா நடிகருடன் நெருக்கம் – இளம் ராணி நடிகைக்கு தாறு மாறு டோஸ் விட்ட தாய்க்குலம்..!

பெங்களூருவை சேர்ந்த பேய் நடிகை அவர். அழகு தேவைதையாக இருந்தாலும் அறிமுகமானது பேய் படம் என்பதால்ராணி நடிகைக்கு இந்த பெயர். இவருக்கு, ஒரு அக்காவும் இருக்கிறார்.இரண்டு ராணிகளும் பட வாய்ப்புக்கான தீவிரமான வேட்டையில் இருகிறார்கள். இளம் இருக்கும் வரை கல்லா கட்டி செட்டில் ஆகி விட வேண்டும் என்று தான் சினிமாவுக்கே வந்தோம் என பேட்டியில் கூட கூறியுள்ளார்கள்.

ஆனால், தங்கை ராணி நடிகைக்கு அனகோண்டா நடிகருடன் ஏற்பட்ட நட்பு விவகாரமாகியுள்ளது. விஷயத்தை அறிந்த ராணியின் அம்மா நடிகையை நாயோட்டு பேயோட்டு ஒட்டியிருக்கிறார். பட வாய்ப்புக்காக சென்னையிலேயே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்கியுள்ளார் ராணி.

அவரது அக்கா எப்போதாவது தான் இங்கே வந்து செல்வார். மற்ற நேரங்களில் தனிமையிலேயே காலத்தை ஓட்டி வருகிறார். இதனால், என்னவோ தெரியவில்லை அனகோண்டா நடிகருடன் ஏற்கனவே நட்பாக இருந்த நடிகை மேலும் நெருக்கமாகியுள்ளார்.

சினிமா தோழிகள் மூலம் இதனை அரசல் புரசலாக அறிந்து கொண்ட நடிகை விஷயத்தை அம்மா காதில் சேர்த்து விட்டார். இதனை கேட்ட நடிகையின் அம்மா சென்னையில் குப்பை கொட்டியது எல்லாம் போதும் மொதல்ல கிளம்பி வீட்டுக்கு வா என்று பரேடு எடுத்துள்ளார். லாக் டவுன் சூழலிலும் கமுக்கமாக பெங்களூர் சென்று சேர்ந்துள்ளார் அம்மணி.