பஞ்சு போல மெத்து மெத்துன்னு ஆப்பத்திற்கு மாவு இப்படி அரைச்சா சூப்பரா கிடைக்கும்

பதிவுலகம் பல விசித்திரங்களைக் கண்டிருக்கிறது. அதில் ஒன்றாக ஒரு பிரபல பதிவர் சுடுதண்ணீர் செய்வது எப்படி என்று பதிவிடுகிறார். இன்னொரு “பிரபல” “பிரபல” பதிவரோ அதற்கு எதிர்பதிவு எழுதுகிறார்.

தமிழ் மீது வாசம் கொண்ட இன்னொரு பதிவரோ இதற்கு போட்டியாக அவித்த முட்டை செய்வது எப்படி? என்று பதிவிடுகிறார். இதுபோன்ற பதிவுகளால் தான் நமக்குள்ளே ஒளிந்திருக்கும் நளபாக சமையல் கலைஞன் வெளியே வருகிறான்.

ஆண்களுக்காக இவர்கள் ஆற்றியிருக்கும் இந்த சமூக தொண்டை முன்னுதாரணமாகக் கொண்டு நானும் எனக்கு தெரிந்த சமையல்களில் ஒன்றை இந்த சமூகத்திற்காக சொல்லலாம் என்று முடிவெடுத்து இந்த பதிவை பதிவிடுகிறேன்.

ஆப்பம் சுடுவது என்னமோ சுலபம் தான். மாவு ஒரு கரண்டியை, ஆப்ப சட்டியில் ஊற்றி ஒரு சுற்று சுற்றினால் மிருதுவான ஆப்பம் ரெடி. இதன் கூடவே ஏலக்காய், நாட்டுச்சர்க்கரை போட்டு தேங்காய் பால் செய்து உண்டால் இரவு தூக்கம் கண்ணை சொருகும். ஆரோக்கியமானதும் கூட.

குழந்தைகள் விரும்பி உண்ணுவார்கள். ஆப்பம் சுடுவதில் உள்ள சூட்சமமே மாவை பக்குவமாக அரைப்பதில் தான் உள்ளது. அந்த சூட்சமம் பற்றி காண்போமா?பஞ்சு போல மெத்து மெத்துன்னு ஆப்பத்திற்கு மாவு இப்படி அரைச்சா சூப்பரா கிடைக்கும் கீழே உள்ள வீடியோ மூலமாக தெரிந்து வீட்டில் அசத்துங்கள்