வெள்ளை நிற கவர்ச்சி உடையில் செல்ஃபி எடுத்து இளசுகளை உ சுப்பேத்திய மேகா ஆகாஷ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படம், இவருக்கு சிறந்த அறிமுக படமாக அமைந்தது.

இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கியிருந்த இப்படத்தின் மூலம் கடைசியாக சில படங்களில் பார்க்க முடியாத தலைவரின் ஸ்டைல் பார்க்க முடிந்தது. இந்த படத்தில் நடிக்க வருவதற்கு முன் பல விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார்.

மீரா சீயக்காய் விளம்பரத்தில் இவரை பலரும் பாக்க தவறியது இல்லை. மேலும் தனுஷுடன் என்னை நோக்கி பாயும் தொட்டா சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன் அதர்வாவுடன் பூமராங் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

தெலுங்கில் லை சல் மோகன் ரங்கா’ போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள மேகா ஆகாஷ், கடந்த ஆண்டு சூரஜ் பஞ்சோலி நடித்த சேட்டிலைட் ஷங்கர் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.

இந்த பட வாய்ப்பு தான், மற்ற சில இளம் நடிகைகளை இவர் மீது பொறாமை பட வைத்துள்ளது. காரணம் இந்த படத்தில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேகா ஆகாஷ். ராதே என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை, பிரபல நடிகரும், இயக்குனருமான பிரபுதேவா இயக்க உள்ளார்.

மற்ற இளம் நடிகைகளை போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதில்லை மேகா ஆகாஷ். இது, இவருடைய மைனஸ் பாய்ண்டாக பார்க்கப்படுகின்றது. இருந்தாலும், ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒரு நாள் என தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்

அந்த வகையில், தற்போது அவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரை அணு அணுவாக வர்ணித்து வருகிறார்கள்.