1 முறை எடுத்துக் கொள்ளுங்கள். மூட்டு முதுகுவலி | பலவீனம் நோய்களை விலக்கி, மூளை வலுவாக இருக்கும்

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகு வலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? முதுகு வலியை எப்படி குணப்படுத்துவது இதுபோன்ற பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இதற்கானத் தீர்வுகளை இங்கு காண்போம்.

முதுகு வலி ஏற்படக் காரணங்கள் :

அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலைசெய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம்.

பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது. செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகு வலி ஏற்படலாம்.

எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது.

அலுவலக வேலைச்சுமை, வீட்டுப் பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாகவும் முதுகு வலி ஏற்படலாம். இதெற்கெல்லாம் ஒரு அருமையான தீர்வுதான் கீழே உள்ள வீடியோவில் பார்க்க போகிறோம்