சர்க்கரை நோயாளிகள் உட்பட அனைவரும் ஏன் இதை கட்டாயம் குடிக்க வேண்டும்?

சர்க்கரை நோய் என்பது ஒரு நோயல்ல. இது ஒரு குறைபாடு அல்லது கோளாறு. இன்று சர்க்கரை நோயால் ஏராளமானோர் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனை ஒருவருக்கு எப்போது வரும் என்று கூற முடியாது. ஒருவருக்கு சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான். இன்றைய காலத்தில் இந்த இரண்டும் தான் மோசமானதாக உள்ளது. இதனால் தான் இன்று ஏராளமான நோய்கள் மனிதரைத் தாக்குகின்றன.

அதிலும் ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால், எப்படி கர்ப்பிணிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டுமோ, அதேப் போல் தான் சர்க்கரை நோயாளிகள் சாப்பிடும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவுகள் என்றால் சுத்திகரிக்கப்படாத முழு உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தான். இவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்து வந்தால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து, சர்க்கரை நோய் தீவிரமாகி இதய நோய் போன்ற சிக்கலான நோய்களின் தாக்கத்தைத் தடுக்கலாம்.

கீழே சர்க்கரை நோயாளிகளுக்கான சில சிறப்பான உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதில்லை. உங்களது அன்றாட டயட்டில் இந்த உணவுகளையும் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டில் வைப்பதோடு, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.