இனி ஒரு கொசு கூட க-டி-க்-கா-து 100% Working..! இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே…

ஒரே ஒரு கொசுவின் கடி உங்களுக்கு டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா போன்றவற்றை வர வைத்து மருத்துவமனையில் சேர்த்து விடும். சில எலட்ரானிக் சாதனங்கள் கொசுவை விரட்ட பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் ஒரு சிலர் இவற்றை பயன்படுத்தமாட்டார்கள்.

அப்படியானால் நீங்கள் இயற்கையான வழிமுறைகளை தான் நாட வேண்டும். கொசுவை விரட்ட சிறந்தது வேப்பிலை தான். கிராமப்புறங்களில் வீட்டிற்கு குறைந்தது ஒரு வேப்பமரமாவது இருக்கும். இது மருத்துவ குணங்களை உள்ளடக்கியதோடு மட்டுமில்லாமல், தெய்வமாகவும் கருதப்படுகிறது.

வேப்ப எண்ணெய்
தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு வேப்ப எண்ணெய் கலந்து சருமத்தில் தேய்த்தால் கொசுக்கள் பக்கமே வராது. வேம்பு உங்களது சருமத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. உங்களது சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. வேம்பில் இருந்து வரும் இயற்கையான வாசனை கொசுக்களை அருகில் நெருங்கவிடாது.

குழந்தைகளுக்கு
குழந்தைகளை கொசுக்கள் கடிக்காமல் இருக்க, ஒரு துளி வேப்ப எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் கலந்து தடவி விடலாம். இது குழந்தைகளின் சருமத்தை பாதிக்காது.சந்தேகம் இருந்தால் உங்களது குழந்தையின் சருமத்தில் கொஞ்சம் எண்ணெய்யை தடவி, ஏதேனும் அரிப்பு உண்டாகிறதா என்று பார்த்து விட்டு பயன்படுத்தலாம்.

கொசு விரட்டி
உடலில் எண்ணெய்யை தடவுவது அசௌகரியமாக இருக்கிறது என்றால் நீங்கள் நீம் ஆயில் டிஃயூசரை (neem oil diffuser) பயன்படுத்தலாம். இதில் சில துளிகள் வேப்ப எண்ணெய்யை ஊற்றி அறையின் ஒரு மூலையில் வைத்துவிட வேண்டும். இது கொசுக்களை விரட்டி விடும்.

வேப்பிலை!
காய்ந்த வேப்பிலையை தீயில் ஈட்டு புகை போட்டாலும், கொசுக்கள் வராது. இந்த முறையை கிரமப்புறங்களில் பெரும்பாலான வீடுகளில் மாலை நேரத்தில் செய்வார்கள்.

பிற வழிகள்
கொசுக்களை விரட்டும் பூண்டு, சாமந்தி போன்ற செடிகளை வளர்ப்பதனாலும் கொசுக்கள் வராது. ஜன்னல் திரைகளுக்கு வலை போட்டாலும் கொசுகள் வருவதை தடுக்க முடியும்.