அடடே நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகளா இது..? இவர் என்ன வேலை செய்கின்றார் தெரியுமா..?

நகைச்சுவை பாத்திரம் ஆனாலும், குணச்சித்திரப் பாத்திரமானாலும் சரி தனக்கென தனி முத்திரை பதித்து சிறந்த நடிப்பை வழங்குபவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சின்ன பாப்பா.பெரிய பாப்பா சீரியலில் நடிகை நளினியின் சேவராக வந்துதான் ஹிட் ஆனார் எம்.எஸ்.பாஸ்கர்.

பட்டாபி பாத்திரத்தில் காது கேட்காதவராக காதோரம் கையை வைத்துக்கொண்டு சிறப்பாக நடித்திருப்பார். டப்பிங் ஆர்ட்டிஸ்டாகத்தான் தன் வாழ்க்கையில் திரைப் பயணத்தைத் தொடங்கினார் எம்.எஸ்.பாஸ்கர். திருமதி ஒரு வெகுமதி படத்தில் இருந்துத்தான் தன் நடிப்புலக பயணத்தைத் தொடங்கினார்.எம்.எஸ்.பாஸ்கரின் மகன், 96 படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்திருந்தார். எம்.எஸ்.பாஸ்கருக்கு ஒரு மகளும் உண்டு.

எம்.எஸ்.பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக தமிழ் சினிமாவில் வலம்வருகிறார். ஜான்வி கபூர் நடித்துள்ள gunjan sexena: the kargil girl படத்தில் ஐஸ்வர்யா தமிழுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். இதை அவர் அதிகாரப்பூர்வமாக தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை சொல்லிவருகின்றனர். எம்.எஸ்.பாஸ்கருக்கு இவ்வளவு அழகிய மகளா? என்றும் ஹார்ட்டீன் விட்டுவருகின்றனர்.