சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மகேந்திர சிங் தோனி ஓய்வு !! க ண் ணீர்க்கடலில் மூழ்கிய ரசிகர்கள் !!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானும் ஆன மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளர்.

இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி, சரியாக இரவு 7.29 மணியிலிருந்து நான் விடை பெறுகிறேன் என்று பதிவிட்டுள்ளார். கடந்த ஓராண்டாக கிரிகெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்த நிலையில் தற்போது ஓய்வு முடிவை அறிவித்துள்ளர். தோனியின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

38 வ யதை கடந்த தோனி கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை போட்டியுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு பின்னர் நடந்த கிரிக்கெட் போட்டிகளில் தோனி இந்திய அணியில் இடம் பெற வில்லை. இதையடுத்து தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்று பேச்சு எழத் தொடங்கியது. தற்போது அந்த முடிவை தோனி அறிவித்துள்ளது  ரசிகர்ளிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.