வாரம் 2 முறை சாப்பிடுங்க வலியெல்லாம் பறந்து போகும்

மனித உடல் ஒவ்வொரு சமயமும் உடலினுள் ஏதேனும் தவறாக நடந்தால் ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை சரியாக கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதனால் உடலினுள் ஏற்படும் அபாயங்களையும், கோளாறுகளையும் தடுக்கலாம். இன்றைய காலத்தில் பலரும் ஆரோக்கியமற்ற மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டு வருகிறார்கள். இதனால் ஒரு நாளைக்கு ஒருவரது உடலின் செயல்பாட்டிற்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்காமல் போகிறது.

மேலும் தற்போதைய மார்டன் டயட், பலருக்கும் வைட்டமின் குறைபாட்டினை உண்டாக்குகிறது. சரி, ஒருவரது உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்பட்டால் என்ன நடக்கும் என தெரியுமா? வைட்டமின் குறைபாடு உள்ள உடலில் தான் நோய்கள் எளிதில் புகுந்துவிடும்.

இதனால் தான் இன்று ஏராளமானோர் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளால் கஷ்டப்படுகிறார்கள். ஏனெனில் வைட்டமின்களானது உடலினுள் ஒவ்வொரு சிறிய செயல்பாட்டிலும் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த வைட்டமின்களின் அளவு குறைவும் போது, உடலானது நமக்கு அந்த குறைபாட்டை ஒருசில அறிகுறிகளின் மூலம் உணர்த்தும்.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன.ஆண்களுக்கு 13.5-17.5 மி.கி./டெ.லி. அளவும், பெண்களுக்கு 12-15.5 மி.கி/டெ.லி அளவும் இருக்க வேண்டும். இதில் சிறிய மாறுபாடுகள் இருக்கலாம்