நான் ஒன்றும் இல்லாதவனாய் இருந்தப்போ உதவியவர் ‘ அஜித்’ – நெகிழும் சென்றாயன்

நடிகர் அஜித்தின் உதவும் குணம் குறித்து ஒட்டுமொத்த தமிழகமும் அறியும். அந்த அளவிற்கு அவர் மறைமுகமாக செய்த உதவிகள் நாளுக்கு நாள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், காமெடி நடிகர் சென்றாயனும் அஜித் தன் வாழ்வை மாற்றியது குறித்து மனம் திறந்திருக்கிறார்.

சினிமாவில் அறிமுகமாவதற்கு முன், வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருந்த நினைவுகளை, நேர்காணல் ஒன்றில் பகிர்ந்திருந்தார் சென்றாயன்.

அதில், குறிப்பிட்ட காலகட்டத்தில் எதேச்சையாக நடிகர் அஜித்தினை, படப்பிடிப்பில் பார்க்கும் வாய்ப்பு ஒன்று கிடைத்ததாக கூறுகிறார் சென்றாயன்.

கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ரசிகனாய் அஜித்தினை பார்க்க சென்ற அவர், தன் நிலையை கூறி ‘வேலை ஏதும் இருந்தால் வேண்டும் சார்’ என தயக்கத்துடன் அஜித்திடம் உதவி கேட்க, எந்த வித தயக்கமும் இன்றி தன் வீட்டு முகவரியை கொடுத்து வீட்டிற்கே அழைத்து உதவினார் என நெகிழ்ந்து பேசி இருந்தார்.