உடல் முழுவதும் குளிக்கும் முன் ஒருமுறை போட்டு பாருங்கள் கருமை மறைந்து பளிச்சென்று ஆகிவிடும்

தற்போது இருக்கும் அவசர உலகில் பெரும்பாலான மக்கள், தங்களின் முகம் மற்றும் உடல்களை பாதுகாக்க, செயற்கை முறையில் ஆன பல கிரீம்களை பயன்படுத்துகின்றனர். அது இப்போதைக்கு நன்றாக இருக்குமே தவிர அடுத்து பின்னர், பெரிய விளைவுகளை கொடுக்கிறது.

முகத்தில் உள்ள கருமை மறைய வேண்டும் என்றால், உருளைக்கிழங்கு சாற்றை முகத்தில் தடவி வரவேண்டும்.
அதே போல் பஞ்சில், உருளைக்கிழங்கு சாற்றை நனைத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் கருவளையம் மறையும்.உருளைக்கிழங்கு அனைவருக்கும் பிடித்த ஓர் உணவு. இந்த கிழங்கு எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கக்கூடியது. இதில் சாலட், கிரேவி, பக்கோடா, புலாவ் போன்றவை செய்து சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கு சாற்றில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை உள்ளது. எனவே இதை இதனை ஜூஸ் செய்து குடித்தும் வரலாம்.

உருளைக்கிழங்கு ஜூஸ் தயாரிக்கும் முறை

முதலில் மூன்று உருளைக்கிழங்கை எடுத்து சுத்தம் செய்து துருவி கொள்ள வேண்டும், அதன் பின், அதை ஒரு துணியில் போட்டு பிழிந்து அதன் சாற்றை எடுத்து, அப்படியே குடித்து வரலாம்.இல்லையேல் உருளைக்கிழங்கு மற்றும் கற்றாலை வெட்டி போட்டு அத்துடன் மிக்ஸியில் அரைத்து வடிகட்டி குடித்து வரலாம்.