வறட்டு இருமலால் அவஸ்த்தை படுகின்றீர்களா.!? இந்த பாலை ஒரு முறை குடித்து பாருங்கள்..! பாட்டி வைத்தியம் உங்களுக்காக…!!

பொதுவாக சிலருக்கு இரவு நேரத்தில் மட்டும் இருமல் வரும். அதுவும் நன்கு ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று தொண்டையில் ஏதோ சிக்கிக் கொண்டது போல் இருமல் கடுமையாக வரும்.இதனால் நாள் முழுவது தூங்கமால் விழிந்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு இந்த வறட்டு இருமல் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது.

வறட்டு இருமலால் அவஸ்தைப்படும் போது, அத்துடன் தொண்டைப் புண், சோர்வு, எரிச்சலுணர்வு மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் போன்றவற்றையும் காணக்கூடும்.இதுபோன்று இரவு நேரங்களில் வரும் வறட்டு இருமலை போக்க சில எளிய இயற்கை வைத்தியங்கள் உள்ளன. இவற்றில் சிலவற்றை இங்கே பார்ப்போம்.

ஒரு டம்ளர் சூடான பாலில், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இது நோய்த்தொற்றுக்களை சரிசெய்ய உதவி, வறட்டு இருமலில் இருந்து விடுவிக்கும்.1/2 டீஸ்பூன் மிளகுத் தூளை 1/2 டீஸ்பூன் நெய்யுடன் சேர்த்து கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள். இதனால் வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

ஒரு துண்டு நற்பதமான இஞ்சியை வாயில் நாள் முழுவதும் போட்டு மெல்லுங்கள். இதனால் வறட்டு இருமல் வருவது தடுக்கப்படுவதோடு, செரிமான பிரச்சனைகளும் தடுக்கப்பட்டு, உடலின் ஆரோக்கியமும் மேம்படும்.எலுமிச்சையின் சாற்றினை 2 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, தினமும் பலமுறை குடித்து வர, தொல்லைத் தரும் வறட்டு இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம்.

தேனை 5 டேபிள் ஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து 2 நிமிடம் சூடேற்றி இறக்கி குளிர வைத்து சாப்பிட, வறட்டு இருமல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.கற்றாழை ஜெல் ஜூஸில் தேன் கலந்து ஒருவர் தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், வறட்டு இருமல் நீங்குவதோடு, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

1/2 டீஸ்பூன் வெங்காய சாற்றில் 1 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் 2 வேளை உட்கொள்ள வேண்டும். இதனால் தொல்லைமிக்க வறட்டு இருமலில் இருந்து விடுபடலாம்.ஒரு அகலமான பாத்திரத்தில் நன்கு கொதிக்க வைத்த சுடுநீரை நிரப்பி, அதில் சில துளிகள் யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து கலந்து, 15 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் தொடர்ந்து பின்பற்றினால், வறட்டு இருமலைத் தடுக்கலாம்.

சிக்கன் சூப் குடிப்பது வறட்டு இருமலுல் மிகவும் நல்லது. அந்த சிக்கன் சூப்பில் வெங்காயம், பூண்டு, இஞ்சி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து குடித்தால், இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.ஒரு டம்ளர் கொதிக்கும் நீரில் 1 டீஸ்பூன் இஞ்சி பவுடர், 1 சிட்டிகை பட்டைத் தூள் மற்றும் சிறிது கிராம்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, 5 நிமிடம் கழித்து வடிகட்டி, தினமும் குடியுங்கள். இது தொண்டையில் உள்ள பிரச்சனைகள் நீங்குவதோடு, வறட்டு இருமல் பிரச்சனையும் சரியாகிவிடும்.