நெஞ்சு சளியால் நுரையீரல் பாதிக்கப் பட்டு அவஸ்த்தை படுகிறீர்களா.!? இதோ இயற்கை முறையில் இலகுவான தீர்வு…!!

பொதுவாக சிலருக்கு சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். ஆனால் நெஞ்சு சளி வந்து விட்டால் சரியாவது கடினமானது ஒன்றாகும்.நெஞ்சு சளி மூச்சுக் குழாய் அழற்சி அல்லது கபவாதம் போன்ற நோய்களின் தாக்கத்தால் அதிகபடியான இருமல் வரும் போது தான் தெரிய வரும்.

அந்தவகையில் நெஞ்சு சளியின் நிறத்தை வைத்தே (பச்சை அல்லது மஞ்சள்) நெஞ்சு சளியின் ஆரம்பம் எந்த தொற்று நோய் என்பதை பெரும்பாலும் கணித்து விட முடியும்.நாள்பட்ட நெஞ்சு சளியை மாத்திரைகள் மருந்துகளை விட இயற்கையான முறையில் கரைக்க முடியும். தற்போது இதனை எப்படி கரைப்பது என்பது பற்றி காணலாம்.

ஆடாதோடா இலைத் துளிரை எடுத்து நீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி தேன் சேர்த்து பருகி வர நெஞ்சு சளி கரையும்.ஆடாதோடை செடியின் வேரை இடித்து சலித்து சிறிது தேன் விட்டு சாப்பிட்டு வர நெஞ்சு சளி கரையும்.சிறிது எலுமிச்சை சாரை சுடு நீரில் விட்டு நன்கு கலக்கி பின் தேன் சிறிது சேர்த்து கலக்கி குடித்தால் நெஞ்சு சளி கரையும். தினமும் காபி, டீ க்கு மாற்றாக இந்த பானம் குடிக்க பழகி கொண்டால் நெஞ்சு சளியே இருந்த இடம் தெரியாமல் போகும்.

குடிக்க முடிந்த காரத்திற்கு ஏற்றவாறு மிளகுத் தூளை பாலுடன் கலந்து ஒரு வாரம் குடித்து வர நெஞ்சு சளி கரையும்.ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையில் விட்டமின் சி அதிகமாக உள்ளதால் நெஞ்சு சளி இருக்கும் நேரத்தில் இந்த ஆரஞ்சு பழத்தையும், எலுமிச்சை பழத்தையும் அடிக்கடி எடுத்துக் கொண்டால் நெஞ்சு சளி கரையும்.துவரம் பருப்பு, மிளகு, உப்பு மூன்றையும் வாணலியில் வறுத்து பொடி செய்து சுடு சாதத்தில் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சு சளி கரையும்.

நெஞ்சு சளி கரைய இரவில் பசும் பாலில் சிறிது மிளகுத்தூள், மஞ்சள் தூள், தேன் கலந்து குடித்தால் நெஞ்சு சளி கரையும்.துளசி இலைகளை நீரில் கழுவி விட்டு, தினமும் துளசிச் சாரை பருகினால் நெஞ்சு சளி கரையும்.நெல்லிக்காய் சாறில் மிளகுத் தூள் மற்றும் தேன் இரண்டையும் கலந்து குடித்து வந்தால் சளி, மூக்கடைப்பு நீங்கும்.

புதினா இலை (ஒரு கைப்பிடி) மிளகு(3) இரண்டையும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சளி, இருமல், நுரையீரல் கோளாறுகள் நீங்கும்.வெற்றிலைச் சாற்றில் இரண்டு சொட்டுக்களை காதில் விட்டால் சளி ஒழுகுவது நிற்கும்.பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை வைத்து துவையல் செய்து சுடுசோற்றில் நெய்யிட்டு உண்ண மார்பு சளி நீங்கும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிது தேங்காய் எண்ணெய் எடுத்து அதில் கற்பூரம் சேர்த்து நன்கு சுட வைக்க வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக கற்பூரம் கரைய ஆரம்பிக்கும். கற்பூரம் நன்கு கரைந்ததும் பாத்திரத்தை இறக்கி விடலாம். சூடான எண்ணையை கையில் பட்டு விடாதவாறு பாதுகாப்பான இடத்தில் ஆர வைக்க வேண்டும். தேங்காய் எண்ணெய் நன்கு ஆறியதும் அந்த எண்ணையை நெஞ்சில் தடவி வர நெஞ்சு சளி குணமாகும்.