ஒரு வாரம் இதை தடவினால் மறுவாரம் மீசை தாடி அடர்த்தியாகவும் வளரும் வெள்ளை முடி கருமையாக மாறும்

மீசை தாடி சீக்கிரம் வளர அனைத்து ஆண்களுக்கும் பொதுவாக மீசை மற்றும் தாடி வளர்ப்பது மிகவும் பிடித்த ஒன்று. சில ஆண்களுக்கு மிக எளிதாகவே அதாவது இயற்கையாகவே எளிதில் வளர்ந்து விடும்.

சில ஆண்களுக்கு அவர்கள் என்ன தான் முயற்சி செய்து பார்த்தாலும் மீசை, தாடி என்பது வளரவே வளராது. ஆண்களுக்கு அழகு சேர்ப்பது மீசை மற்றும் தாடி இரண்டும் தான். எனவே மீசை மற்றும் தாடி எனக்கு வளரவில்லை என்று கவலைப்படுபவர்கள் இனி கவலைப்பட வேண்டாம்.

உங்களுக்காகவே இந்த பக்கத்தில் மீசை தாடி வளர்வதற்கு சூப்பர் டிப்ஸ் இருக்கின்றது. இந்த டிப்ஸை தினமும் செய்து வந்தால் கண்டிப்பாக உங்களுக்கு மீசை மற்றும் தாடி மிக எளிதாகவே வளர ஆரமித்து விடும்.

தைலம் தயாரிக்கிற முறை ;

‘செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய் ரெண்டு லிட்டர் வாங்கிக்கணும். வெள்ளைக் கரிசாலை, குமரி கற்றாழை, கீழாநெல்லி, அவுரி இவை எல்லாத்திலயும் ஒரு படிச்சாறு எடுத்துக்கணும். கூடவே 250 மி.லி. கறிவேப்பிலை சாறு எடுத்து நல்லா பதமா காய்ச்சிக்கணும்.

தாடி மீசை முடி வளர மூலிகைத் தைலம் ரெடி. சூட்டு உடம்பா இருந்தா, கொஞ்சம் நெல்லிக்காய்சாறும் சேர்த்துக்கலாம். மூக்கடைப்பு சைனஸைடிஸ் இருக்கிறவங்க, இந்த சாறோடு அகில்கட்டை, சுக்கு போட்டு 500 மி.லி. கஷாயமா செஞ்சு வெச்சுக்கலாம். இந்தத் தைலம் அதுக்கும் மருந்தாயிடும். இந்த மாதிரி செய்த தைலம் தேய்ச்சு குளிச்சால், உடலில் பித்தம் தணியும்.

வயித்து வலியை உண்டாக்கும் குடல்புண்களையும் கூட சீக்கிரமா ஆற்றிடும். சும்மா மேம்போக்கா, தலைக்கு எண்ணெயை காட்டக் கூடாது; நல்லா தேய்க்கணும். குறைஞ்சது 5 மணி நேரமாவது தலையில் இந்த எண்ணெய் இருக்கணும். ரொம்பத் தலை பிசுபிசுப்பு இருந்தால், சீயக்காய்பொடி தேய்ச்சுக்கலாம்.”