அழகில் தாய், தந்தையை மிஞ்சிய குழந்தைகள்… சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான சூர்யா, ஜோதிகாவின் கொண்டாட்ட புகைப்படம்!

நடிகை ஜோதிகாவை பற்றி தெரியாத தமிழ் சினிமா ரசிகர்களே கிடையாது அந்த அளவிற்கு பிரபலமானவர்.இவர் தமிழ் சினிமாவின் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர்.தற்போது இவர் கோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர் தமிழ் சினிமா துறையில் முதன் முதலாக அறிமுகமான படம் s.j சூர்யா அவர்கள் இயக்கத்தில் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வாலி படத்தின் மூலம் அறிமுகமாகி தன்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.

பின்பு படிபடியாக தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறையிலும் நடித்துள்ளார்.ஜோதிகா அவர்கள் கெளதம் மேனன் இயக்கிய காக்க காக்க படத்தில் சூர்யாவும் மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து நடிதுள்ளர்கள்.சூர்யா அவர்கள் ஜோதிகாவை பல வருடம் காதலித்து வந்துள்ளார்.இவர்கள் இருவரும் 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்கள் இருவருக்கும் தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர்.ஜோதிகா திருமணம் நடந்த பிறகு எந்த ஒரு படமும் நடிக்கவில்லை.தற்போது இவர் தமிழ் சினிமாவில் படங்களை நடித்து வந்த வண்ணம் இருக்கிறார்.மற்ற திரைத்துறை குடும்பங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கி வந்த சூர்யாவின் குடும்பம் தற்போது பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றது.

ஜோதிகாவின் தஞ்சை கோவில் விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், பலரும் ஜோதிகாவிற்கு ஆதரவாக பேசி வருகின்றனர்.ஜோதிகாவின் பொன்மகள் வந்தால் திரைப்படத்தினை ஆன்லைனில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் இப்படத்தினை அமேசான் ப்ரைமில் நேரடியாக ரிலீஸ் செய்யக் கூடாது தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து சூர்யா, ஜோதிகாவின் திரைப்படத்தினை திரையரங்கில் வெளியிட முடியாது என்று அறிவித்துள்ளது.இவ்வாறு பல சர்ச்சையில் இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு சூர்யா, ஜோதிகா தங்களது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் சூர்யாவின் குழந்தைகள் அழகில் தாய், தந்தை இருவரையும் மிஞ்சும் அளவிற்கு இருக்கின்றனர்.

இதனை அவதானித்த ரசிகர்கள் பலர் ஹேப்பி பேமிலி என்று கூறி வருகின்றனர்.