ஒருகாலத்தில் கொடி கட்டி பறந்த தமிழ்பட நடிகை!… இப்போ எப்படியிருக்காங்க பாருங்க

1980களில் தமிழ் திரையுலகை கலக்கிய நடிகைகளில் ஒருவர் சரிதா.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய சினிமாக்களில் அசத்திய இவர் 250க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுதவிர 90களில் நடித்த ரம்யா கிருஷ்ணன், நக்மா உட்பட பல நடிகைகளுக்கு குரலும் கொடுத்துள்ளார்.சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருதுகள், நந்தி விருதுகள் உட்பட தமிழக மற்றும் கன்னட அரசின் விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

இரண்டு முறை திருமணம் செய்தும், கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்துவிட்ட சரிதா தற்போது தன்னுடைய மகனுடன் துபாயில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் சகநடிகையான ஸ்ரீபிரியாவுடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.