இலங்கை தமிழரை மணந்த பிரபல சீரியல் நடிகை!… கணவருடன் வெளியிட்ட அசத்தல் புகைப்படம்

நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் நடிகை சரண்யா.

செய்தி வாசிப்பாளராக மீடியாவுக்குள் நுழைந்த சரண்யாவுக்கு சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.அதை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டவர், தன்னுடைய திறமையால் ஏராளமான ரசிகர்களின் மனதில் குடியேறினார்.

கல்லூரியில் படிக்கும் போதே இலங்கை தமிழரான அமுதன் என்பவரிடம் மனதை பறிகொடுத்த சரண்யாவுக்கு, கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

இவரது கணவர் லண்டனில் வசித்தாலும் சென்னையில் குடியேறிய சரண்யா தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.இவருக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது, பழைய பாடல்கள் மீது தீரா காதல் கொண்ட சரண்யா நன்றாக பாடவும் செய்வாராம்.

இந்நிலையில் காதலர் தினத்தை தன்னுடைய கணவருடன் கொண்டாடியுள்ள சரண்யா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.