தனது காதலிக்காக 178 கோடி ரூபாயில் பிரமாண்ட மாளிகை வாங்கிய அமேசான் நிறுவனர்.. வா ய்பிளந்த பார்வையாளர்கள்..!

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் 178 கோடி ரூபாயில், காதலிக்காக பெரிய மாளிகையை வாங்கியுள்ள சம்பவம் பிரமிக்க வைத்துள்ளது.

பிரபல ஆன்லைன் சேல்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos) தன்னுடைய காதலிக்காக 165 மில்லியன் டாலர் மதிப்பில், இந்திய மதிப்பில் ஆயிரத்து 178 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்ட மாளிகையை வாங்கிட்யுள்ளார்.

இந்த மாளிகை கடந்த 1930ம் ஆண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத்திற்காக அந்த வடிவமைக்கப்பட்டு இருந்தது. அமெரிக்காவில் இருக்கும் பிவெர்லி ஹில்ஸ் பகுதியில் 9 ஏக்கர் பரப்பளவில் இந்தப் புதிய வீடு அமைந்தது.

தற்போது, பீசோஸ் இந்த வீட்டைத்தான் தன்னுடைய காதலிக்காக வாங்கி இருக்கின்றார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக தேடி அலைந்து காதலிக்காக தற்போது இந்த 9 ஏக்கர் வீட்டை வாங்கி இருக்கின்றாராம் ஜெஃப் பீசோஸ். ஏக்கர் கணக்கிலான மொட்டை மாடியில் நிறைந்து கிடக்கும் தோட்டம் ஒரு வனம் போலவே காட்சி அளிக்கின்றது.