இந்த தாவரத்தின் ரகசியம் தெரிந்தால், விட்டுவிடாதீர் கோடிக்கணக்கான பயன்களை கொட்டிக்கிடக்கின்றன

ஆண்மை பெருகவும், உடல் ஆரோக்கியமாக இருக்கவும் பலவித உணவுகள் பழ வகைகள் என நமது பர்ஸை பதம் பார்த்து வருகிறது.இந்த நிலையிலிருந்து மாறி செலவின்றி ஆண் விந்து இனப்பெருக்கம் அடையவும் மற்றும் பல்வேறு நன்மைகளை பெறவும் நாம் ஒரு சிறிய கீரை வகையை பார்ப்போம்.

ரோட்டோரங்களில் வளர்ந்து கிடைக்கும் அம்மான் பச்சரிசி கீரை வகைதான் நாம் இப்போது பார்க்கப் போகும் கீரை.ஒரு ரூபாய் செலவின்றி உடல் ஆரோக்யம் மேம்பட உடல் வலிமை பெருக வைக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.

சாதாரணமாக ஏதோ செடி போல என்று நாம் கடக்கும் பல தாவரங்கள்தான் உயிர் ஆதாரத்திற்கு உறுதுணையாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த அம்மான் கீரையும் ஒன்று.இதன் பால் மருத்துவத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. இதில் ஆஸ்ட்ரிஜெண்ட் , மெழுகு, உயர் கால்சியம் மற்றும் குளிர்ச்சி தன்மை போன்றவை அடங்கியுள்ளன.

இந்த அம்மான் பச்சரிசி இலைகளை வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போன்ற நோய்கள் குணமாகும், உஷ்ண உடல் குளிர்வடையும்.வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில இந்த இலைகளை அரைத்து சாறு எடுத்து பற்று போட்டு வந்தால் ஐந்து நாட்களில் அவை மறைந்து விடும்.

இந்த இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் வாய்ப்புண் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் வறண்ட உதடுகளுக்கு இந்த இலையின் பால் நல்மருந்தாகும்.வெயில் காரணமாக அல்லது காயம் காரணமாக சருமத்தில் கருப்பு நிறம் ஏற்பட்டால் இதன் பாலை தடவி ஊறவைத்து குளித்து வர சருமம் பழைய நிலையை அடையும்.

நாட்டு பசுவின் பாலுடன் இந்த அம்மன் பச்சரிசி கீரையின் பூக்கள் சேர்த்து அரைத்து அதனை பாலுடன் சிறிதளவு அருந்தி வர வேண்டும். 18 நாட்கள் இது போல சாப்பிடும்போது இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.இந்த கீரையை மோருடன் கலந்து சாப்பிட்டு வரும்போது வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள், மற்றும் சினை முட்டையில் மாற்றம் ஏற்பட்டு கருவுருதல் போன்றவை எளிதாகும்.

ஸ்டோன் ப்ரேக்கர் இலைகளுடன் அம்மான் பச்சரிசி இலைகளை சம அளவு எடுத்து விழுதாக்கி பாலில் கலந்து குடித்து வர ஆண்களின் விந்தணு பிரச்னைகள் சீராகி ஆண்மை தன்மை அதிகரிக்கும்.அம்மான் பச்சரிசி இலைகளோடு மிளகு மற்றும் வேப்பிலை சேர்த்து அரைத்து காலையில் உண்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.

எலுமிச்சை அளவு இந்த இலைகளை அரைத்து சாப்பிட்டு வந்தால் வாத நோய்கள் காணாமல் போகும். இந்த அம்மான் கீரையின் பாலை எடுத்து மருவின் மீது வைத்தால் எவ்வளவு பெரிய மருவாக இருந்தாலும் உதிர்ந்து விடும். மரு இருந்த தழும்பு மறைந்து சாதாரண சருமம் போல தோன்றும்.